கோடநாடு வழக்கு – மருது அழகுராஜ் ஆஜரானார்!
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான விசாரணையில் மருது அழகுராஜ் ஆஜரானார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்று நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணையில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜரானார்.
கோடநாடு வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகரின் மேற்பார்வையின் கீழ் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஜெயலலிதா கார் ஓட்டுநர் குணசேகரன் மற்றும் தொழிலதிபர் செந்தில் குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று மருது அழகுராஜ்விடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.