புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட கைதியை முறைகேடாக விடுவித்த குற்றச்சாட்டில் காவலர் பணியிடை நீக்கம்..!
சென்னை புழல் மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிடப்பட்ட கைதியை முறைகேடாக விடுவித்த குற்றச்சாட்டில் சிறைத்துறை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ரவி என்பவர் கொலை முயற்சி வழக்கில் விசாரணைக் கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதற்கு மாறாக ரவி புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் இது குறித்து விசாரித்த போது, குண்டர் சட்ட உத்தரவு நகலை தவறாக புரிந்த கொண்டு விடுவித்ததாக சிறைக்காவலர் பிரதீப் கூறியுள்ளார். இதனையடுத்து காவலர் பிரதீப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது