#Shocking:பெட்ரோல் விலை ரூ.30 அதிகரிப்பு;அரசு திடீர் அறிவிப்பு- ஒரு லிட்டர் இவ்வளவா?..!

Default Image

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  அறிவிப்பு விடுத்தார். இதனையடுத்து,தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள சாமானியர்களுக்கு தற்போது பெரிய  அடியாக பெட்ரோல் விலை ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்த உயர்வுக்குப் பிறகு, பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 179.85 (தோராயமாக ரூ. 180), டீசல் ரூ. 174.15 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கத்தாரில் பாகிஸ்தான் அரசுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) இடையேயான பேச்சுவார்த்தைகள் முறையான உடன்பாட்டை எட்டத் தவறிய ஒரு நாளுக்குப் பிறகு, பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் செய்தியாளர் சந்திப்பில் இத்தகைய அறிவிப்பை அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:

“பாகிஸ்தானில் பெட்ரோல்,அதிவேக டீசல்,மண்ணெண்ணெய் மற்றும் லைட் டீசல் ஆகியவற்றின் விலைகளை 2022 மே 27 வெள்ளிக்கிழமை முதல் லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. புதிய விலைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.179.86 ஆகவும், டீசல் விலை ரூ.174.15 ஆகவும் இருக்கும்.

பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை,மாறாக விலை நிலையாக இருந்திருந்தால் நாடு தவறான திசையில் சென்றிருக்கும்.பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டும்.அரசியலுக்காக மாநிலத்தை மூழ்கடிக்க விட முடியாது”,என்று கூறினார்.

இதன்மூலம்,பாகிஸ்தானின் நிதியமைச்சரின் கூற்றுப்படி, பெட்ரோல் விலை உயர்வு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தை மறுசீரமைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே,கடும் பொருளாதார நெருக்கடியில்சிக்கியுள்ள இலங்கையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.420-க்கு விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்