#BREAKING : தமிழகத்தில் 97.05% நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் பெரியசாமி
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 97.05% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியசாமி பேட்டி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, பல ஆய்வுகளுக்கு பின் தகுதியான அனைத்து நபர்களுக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பெரியசாமி அவர்கள், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 97.05% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.5,200 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய திட்டமிட்டு அதில் 97.05 % கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், ஒருவாரத்தில் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.