ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அரசு
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தகவல்.
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. இதனிடையே, நாடெங்கிலும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் பல குடும்பங்கள் பணத்தையும், உயிரையும் இழந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், இன்று நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.