#BREAKING: இரவு நேர ஊரடங்கு ரத்து.. பிப் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை உயர் அதிகாரிகரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேகொண்டார். இதில் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. மேலும், நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாகவும், வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது எனவும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் (01.02.2022) முதல் திறப்பு!#TNGOVT pic.twitter.com/mHzpQlXhNa
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) January 27, 2022