தமிழகத்தின் மீது எப்போதும் தனித்த அன்பும், பாசமும், நேசமும் , அக்கறையும் கொண்ட பிரதமர் மோடி – பொன் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தின் மீது எப்போதும் தனித்த அன்பும், பாசமும், நேசமும் , அக்கறையும் கொண்டிருக்கும் நமது பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி.
சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மழைப்பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் பேசினேன். மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதித்தேன். மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தேன். அனைவரின் நலன், பாதுகாப்புக்கு பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தின் மீது எப்போதும் தனித்த அன்பும், பாசமும், நேசமும் , அக்கறையும் கொண்டிருக்கும் நமது பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து பெய்யும் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டு வரும் தமிழகத்திற்கு வேண்டிய உதவிகள் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
இதனிடையே பாஜக தேசிய தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்களின் வழிகாட்டலில், தமிழக தலைவர் அன்பு சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி பாஜகவின் தாமரைச் சொந்தங்களும் களத்தில் மக்களுக்கு உதவிடத் தயாராக உள்ளனர். தமிழக மக்கள் இந்த பெருமழையிலிருந்து பாதிப்பில்லாமல் மீண்டிட எல்லாம்வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்.’ என பதிவிட்டுள்ளார்.
தமிழக மக்கள் இந்த பெருமழையிலிருந்து பாதிப்பில்லாமல் மீண்டிட எல்லாம்வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்.
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) November 8, 2021