மத்திய அரசு மத அரசியல் செய்கிறது; ஏழைகளை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை – கபில் சிபல்!
மத்திய அரசு மத அரசியல் செய்கிறது, அவர்களுக்கு ஏழைகளை பற்றி கவலை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய கபில் சிபல் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் பாஜக தலைவர்கள் உண்மையான உலகத்தில் இல்லை எனவும், அதன் காரணமாகத்தான் ஏழைகளின் வருமானம் உயர்ந்து இருப்பதாக பாஜக கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு ஆறாயிரம் சம்பாதிக்க கூடிய ஒருவர், மாதம் இருபத்தைந்தாயிரம் சம்பாதிப்பதாக கூறியிருக்கிறார்.
இது மிகவும் கொடூரமான ஒரு காமெடியாக தான் பார்க்க முடியும். பாஜக மற்றும் அந்த கட்சியை சார்ந்த தலைவர்களின் வருமானம் மட்டுமே தற்போது உயர்ந்திருப்பதாகவும், பொது மக்களின் வருமானம் உயரவில்லை மாறாக எரிபொருள் விலையும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தான் உயர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
மத அரசியல் மட்டுமே செய்யக்கூடிய மத்திய அரசு ஏழைகள் பற்றி கவலை கொள்வதில்லை எனவும், இந்த அரசை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் எனும் நம்பிக்கை தனக்கு உள்ளது எனவும், வரவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இருந்து இது தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.