#Breaking:21 இட ஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Default Image

21 இட ஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான போராளிகளுக்கு விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது:

“சமூக நிதிக் கொள்கையின் தாய்மொழியாக விளங்ககூடிய மாநிலம் நமது தமிழ்மாநிலம்,வகுப்புரிமை,வகுப்பவாரி உரிமை,இட ஒதுக்கீடு,சாதி ரீதியான ஒதுக்கீடு என்று எந்த பெயர் கூறி அழைத்தாலும் அதற்கு சமூக நீதி என்று கொடுக்கும் ஒற்றைச் சொல் பொருளை வேறு எந்த சொல்லும் கொடுக்காது.அத்தகைய சமூகநிதீக் கொள்கைதான் திராவிட இயக்கம்.இந்த தத்துவத்தை இந்தியாவுக்கே கொடையாக கொடுத்தது திராவிட இயக்கம்தான்”,என்று கூறினார்.

மேலும்,தொடர்ந்து பேசிய முதல்வர்,”சமூக நீதிக்கான தொடர்ச்சியான போராட்டத்தில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற 20% இட ஒதுக்கீடு போராட்டம் முக்கியமானது.இத போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை மதித்திட கூடிய வகையில்,அவர்களுக்கு விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும்.

விக்கிரபாண்டி இடைத்தேர்தலின் போது,நான் கொடுத்த வாக்குறுதி இது.யார் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன்,நான் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சிறந்தவன்,நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதால் பின்தங்கிய வகுப்பினருக்காக என் உயிரையும் பணயம் வைத்து போராடுவேன்”,என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Congress - TMC - BJP
Annamalai (14) (1)
dindigul srinivasan
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar
JMM - Congress
rain news today