எனக்கு திருமணமா..? சிவாங்கியின் துறுதுறு பதில்கள்.!

திருமணம் எப்போது என்ற கேள்விக்கு குக் வித் கோமாளி மூலம் புகழ் பெற்ற சிவாங்கி பதிலளித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற சிவாங்கி கிருஷ்ணகுமாருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பாடகி மற்றும் நகைச்சுவை நடிகை மட்டுமல்லாமல், தற்போது தமிழ் திரையுலகில் நடிகையாகவும் களமிறங்கவுள்ளார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நேரலையாக வந்த சிவாங்கி தனது ரசிகர்களின் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் எப்போது உங்களுக்கு திருமணம் என்று கேட்டுள்ளார். அதற்கு “எட்டு வருடங்களுக்குப் பிறகு” என சிவாங்கி பதிலளித்துள்ளார். உண்மையான அன்பு குறித்து அவரிடம் மற்றோரு கேள்வி ரசிகர் கேட்டார். அதற்கு ” என் கருத்துப்படி உண்மையான அன்பு ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் ஒருவரை நேசித்தால், அவர்கள் உங்களை நன்றாக நடத்தவில்லை என்றால், அவர்களிடம் அன்பை காட்டுவது பயனில்லாத ஒன்று “என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சிவாங்கி தற்போது சிவகார்த்திகேயனின் ‘டான்’, பெயரிடப்படாத “ஆர்டிக்கள் 15′ ‘ ரீமேக், “கசேதன் கடவுலடா” ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சில தனியார் நிகழ்ச்சிகளும் பங்கேற்று வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025