75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யார் யாருக்கு என்னென்ன விருது? முழுவிபரம்..!

Default Image

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கும்,கொரோனா பேரிடர் காலத்தில் சிறந்து விளங்கியோருக்கும் முதல்வர் வழங்கிய விருதுகள் குறித்து காண்போம்

இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து அந்தந்த மாநிலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றினார்.

அதன்பின்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களிடையே உரையாற்றி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கும்,கொரோனா பேரிடர் காலத்தில் சிறந்து விளங்கியோருக்கும் பல்வேறு விருதுகளை வழங்கினார்.அதன் விபரம் பின்வருமாறு:

  • தகைசால் தமிழர் விருது – சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என் சங்கரய்யா அவர்களுக்கு நேற்று அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது.
  • டாக்டர் அப்துல் கலாம் விருது – பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் சிறப்பு பேராசிரியர் முனைவர் லட்சுமணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.,
  • கல்பனா சாவ்லா விருது(துணிவு மற்றும் சாகச செயலுக்காக )– மதுரை மாவட்டத்தை சேர்ந்த கொரோனாவால் மறைந்த மருத்துவர் சண்முகப்பிரியா அவர்களுக்கு வழங்கப்பட்டது.இதனை அவரது கணவர் பெற்றுக் கொண்டார்.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது:

  • கிண்டி கொரோனா மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி,
  • சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் நில நிர்வாக இணை ஆணையர் பார்த்திபன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழக அரசு விருது:

  • சிறந்த சேவை புரிந்ததற்காக மருத்துவர் விருது – சேலத்தை சேர்ந்த மருத்துவர் பத்மபிரியா,
  • சிறந்த தொண்டு நிறுவனம் -திருச்சி ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி,
  • சிறந்த சமூக பணியாளர் விருது – திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மரிய அலாசியஸ் நவமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அவ்வையார் விருது:

  • சமூக நலன் மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக  ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சாந்தி துரைசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த மூன்றாம் பாலினத்தவர் விருது:

  • தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருது:

  • சிறந்த மாநகராட்சிக்கான விருது மற்றும் 25 லட்சத்துக்கான பரிசுத்தொகை – தஞ்சாவூர்
  • சிறந்த நகராட்சிக்கான விருது மற்றும் முதல் பரிசு – உதகமண்டலம்
  • இரண்டாம் பரிசு – திருச்செங்கோடு,மூன்றாம் பரிசு – சின்னமனூர்.

சிறந்த பேரூராட்சிக்கான விருது:

  • சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு-திருச்சி மாவட்டம் கள்ளக்குடி,
  • இரண்டாம் பரிசு- கடலூர் மாவட்டம் மேல்பட்டம்பாக்கம்
  • மூன்றாம் பரிசு சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு அரசு மருத்துவமனைகளுக்காண விருது:

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை,
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, ராமநாதபுரம் சாயல்குடி அரசு சமூக சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது

கொரோனா தடுப்பு பணிக்கான சிறப்பு பதக்கம்:

  • சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் ரவி,
  • மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை செவிலியர் காளீஸ்வரி,
  • கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் சுகந்தி உள்ளிட்ட 9 பேருக்கு வழங்கப்பட்டது

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை காவல் துறை விருதுகள்:

  • தர்மபுரி ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் பிரபு
  • மதுரை பேரையூர் பெண் காவல் ஆய்வாளர் ராஜசுலோச்சனா
  • திருப்பூர் வடக்கு காவல் நிலைய தலைமைக் காவலர் கல்யாண பாண்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை விருதுகள்:

  • வட சென்னை தண்டையார்பேட்டை தீயணைப்போர் – இதயகண்ணன்,
    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தீயணைப்பு நிலையம் -சண்முகசுந்தரம் உள்ளிட்டோர்,
  • திருச்சி தீயணைப்பு மீட்பு நிலையம் – முகமது கான் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை நேப்பியர் மேம்பாலம் அருகே 59 அடி உயரம் கொண்ட சுதந்திர தின நினைவுத்தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்,திமுக அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Congress - TMC - BJP
Annamalai (14) (1)
dindigul srinivasan
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar
JMM - Congress
rain news today