காங்கிரஸ் எங்களுக்கு தலைமையாக வேண்டாம்! ஒரு கூட்டாளியாகத்தான் வேண்டும்!மம்தா பானர்ஜி
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணியில் காங்கிரஸ் ஒரு கூட்டாளியாக இணையலாமே தவிர, தலைவராக அல்ல என்று கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அகற்ற கண்டனத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முயற்சித்தது தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.
தீர்மானத்தை திரிணமூல் கட்சியும் ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்பியதாகவும் ஆனால் தாங்கள் ஆதரிக்கவில்லை எனவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என்பதே தங்கள் கருத்து எனவும், தலைமை நீதிபதி பதவிநீக்கம் என்ற அளவுக்கு செல்ல வேண்டாம் என சோனியா, ராகுலிடம் வலியுறுத்தியதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திரிபுரா தேர்தலின்போது, ஒன்றாக இணைந்து பாஜக-வை எதிர்க்கலாம் என்ற யோசனையை ராகுல்காந்தி ஏற்கவில்லை எனவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.