மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்.? இசையமைப்பாளர் யார் தெரியுமா.??

பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, உதயநிதி ஸ்டாலினை இயக்கவிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார். கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய இரண்டு திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.
இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரம் வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் தனுஷை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். இதனை நடிகர் தனுஷே தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகார்வப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், துருவ் விக்ரம் வைத்து படத்தை இயக்கிவிட்டு அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்ததா இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் உதயநிதி ஸ்டாலின் வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். அந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதனை குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தற்போது உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாறன் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் படம், அருண்ராஜா இயக்கும் ‘ஆர்டிகள் 15’ ரீமேக் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024