மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்..!
அரபி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, தருமபுரி, தேனி, விழுப்புரம், ஆகிய 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு என்றும், ஏனைய மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஜூன் 4 (இன்று) முதல் வரும் 8-ம் தேதி வரை, தென் மேற்கு, மத்திய மேற்கு, அரபி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.