டாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவை முதல்வர் திரும்ப பெறவேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்..!
டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவையும் முதலமைச்சர் திரும்ப பெறவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகின்ற 14-ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கை வருகின்ற 21 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் திறக்க அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்பது கொரோனா பரவலை அதிகரிக்க வழிவகுக்கும். டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவையும் முதலமைச்சர் திரும்ப பெறவேண்டும். கொரோனா உயிரிழப்பு மூன்று மடங்கிற்கும் மேலாக உள்ள நிலையில் டாஸ்மாக்கை திறக்கும் முடிவு முறைதானா..? அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்ற அடிப்படையில் முடிவை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசு வருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது என்பதன் அடிப்படையில், 14.6.2021 முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவினை திரும்பப் பெறுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். pic.twitter.com/YPGkkWjxsY
— O Panneerselvam (@OfficeOfOPS) June 12, 2021