#BREAKING: எந்த ஊர்களும், எங்கள் ஊர்தான் திமுக அரசு பாரபட்சம் பார்க்கவில்லை -ஸ்டாலின் ..!

கொரனோ தடுப்பு பணியில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவை மட்டுமல்ல எந்த ஊர்களும், எங்கள் ஊர்தான் திமுக அரசு பாரபட்சம் பார்க்கவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு பணிகளை பார்வையிடுவதற்காக நேற்று இரவு ஈரோடு வந்து இன்று காலையில் பெருந்துறை , திருப்பூர் ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு புதிய ஆக்சிஜன் படுக்கை வசதிகள், கார் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைத்திருக்கிறேன்.
தற்போது கோவைக்கு வந்து இஎஸ்ஐ மருத்துவமனையை பார்வையிட்டேன். மருத்துவர்களைப் போலவே பிபிஇ கிட் உடையணிந்து சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய கொரோனாநோயாளி நேரடியாக போய் நானே போய் பார்த்தேன். அந்த நோயாளிக்கு சிகிச்சை கொடுத்து கொண்டிருக்கக்கூடிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் சந்தித்து அவருடைய உரையாடி இருக்கிறேன்.
பாதுகாப்பு கவச உடை அணிந்து பணிபுரிவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் மருத்துவர்களும், செவிலியர்களும் எப்படி தான் பாதுகாப்பு கவச உடை அணிந்து தன்னுடைய பணிகளை செய்கிறார்கள் என்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்றாக அமைந்திருக்கு, அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டுவும், உற்சாக ஏற்படுத்துவதற்காக தான் நானும் அந்த உடை அணிந்து கொண்டேன்.
பின்னர், அந்த வார்டுக்கு நேரடியாக போய் ஆய்வு பணியை மேற்கொண்டேன். அதைத்தொடர்ந்து, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி இந்த மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியர்கள், அரசு அதிகாரிகளோடு நானும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் , வனத்துறை அமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சர்கள் அந்த பணியை மேற்கொண்டோம். கோவையில் கொரோனா பரவலை குறைக்க அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
சென்னையில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது.எப்படி இருந்தாலும் கோவையிலும்கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. சென்னையை அடுத்து கோவையில் தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன தேவைப்பட்டால் இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு கூட வருவேன்.
கொரனோ தடுப்பு பணியில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவை மட்டுமல்ல எந்த ஊர்களும், எங்கள் ஊர்தான் திமுக அரசு பாரபட்சம் பார்க்கவில்லை. எந்த மாவட்டங்களிலும் ஆக்சிஜன், படுக்கை வசதியை பற்றாக்குறை இல்லை. அரசும், மக்களும் சேர்ந்தால் கொரோனா மட்டுமல்ல எந்த நோயும் வெல்ல முடியும் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025