கங்கை கரையில் 2000 உடல்கள் கண்டெடுப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Default Image

உ.பி எல்லையில் உள்ள கங்கை ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எண்ணிக்கையில் குழப்பம் – அன்னை கங்கை அழுகிறாள் ராகுல் காந்தி ட்வீட்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மற்றும் உத்திர பிரதேச எல்லையில் உள்ள 1,140 கி.மீ நீளம் உள்ள கங்கை ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் நீரில் மிதந்தபோது கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள்  வெளியாகியது. மேலும் உத்திர பிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க இடம் கிடைக்காத காரணத்தினால் இந்த கொடூர செயல் நடந்திருக்க கூடும் என்று அதிகாரிகள் தெறிவித்திருந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை ஒரு அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், அதில் 1,140 கி.மீ நீளம் உள்ள கங்கை ஆற்றில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் 2000 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அதனுடன் நரேந்திர மோடியை  மறைமுகமாக சாடியுள்ளார். அதில் “அன்னை கங்கா ஒருவரை அழைத்ததாகச் சொன்னவர், தாய் கங்கையை அவர் அழவைத்துள்ளதாகவும்” கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்