தமிழகத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு..மத்திய அரசு அறிவிப்பு.!
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மாநிலங்களுக்கு முதல்கட்டமாக ரூ.8873 கோடி ஒதுக்கீடு.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,01,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 2021-22 ஆம் ஆண்டிற்கான அனைத்து மாநில அரசுகளுக்கு மாநில பேரிடர் நிதியாக ரூ.8,873 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், தமிழகத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளியிடப்பட்ட தொகையில் 50 சதவிகிதம் வரை வரை அதாவது 4436.8 கோடி ரூபாய் மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம்.
✅1st instalment of Rs. 8873.6 crore for State Disaster Response Fund (SDRF) released in advance
✅Up to 50% of SDRF amount can be used by the States for COVID-19 containment measures
Read more ➡️https://t.co/oNTCggmwFG
(1/4)@nsitharamanoffc @Anurag_Office @PIB_India— Ministry of Finance (@FinMinIndia) May 1, 2021
அவற்றில் மருத்துவமனைகள், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் , வெப்ப ஸ்கேனர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் , பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் சோதனை கருவிகள் மேம்படுத்தலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய நிதியை கொரோனா பணிகளுக்காக மத்திய அரசு முன்கூட்டியே வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.