+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று தொடக்கம்
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக இன்று கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 5ம் தேதி முதல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக, செய்முறை தேர்வுகள் இன்று துவங்குகின்றன.
தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து கொரோனா காரணமாகமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, செய்முறை தேர்வுகள் கடும் கட்டுப்பாடுகளுடன் , நான்கு குழுக்களாக மாணவர்களை பிரித்து தேர்வுகள் நடத்த பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டு முறைகளை, அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யுதல், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்,ஒவ்வொரு மாணவருக்கும், 4 சதுர மீட்டர் இடம் ஒதுக்க வேண்டும்,முக கவசம், கையுறைகள் அணிவதை பின்பற்ற வேண்டும்.
ஆய்வகக் கருவிகளிலும் செய்முறை தேர்வுக்கு முன், பின், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்,மாணர்வகளின் உடல் வெப்பநிலை சோதனை செய்யவேண்டும்.
கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள மாணவர்களுக்கு வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்த வேண்டும் என்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.