ஆளுநரை திரும்பப் பெறும் வரை போராட்டம்!ஹெச். ராஜாவின் கீழ்த்தரமான பதிவிற்கு பதில் சொல்ல அவசியமில்லை!மு.க.ஸ்டாலின்

Default Image

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு, ஆளுநரை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ அமைந்தால்தான் உண்மை வெளியே வரும். மத்திய அரசு, ஆளுநரை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்.

நாகரீகமற்ற முறையில் ஆளுநர் நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது. ஆளுநருக்கு எதிராக திட்டமிட்டு போராட்டம் நடத்த வாய்ப்பில்லை. எந்த நேரமும், எந்த சூழ்நிலையிலும் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.

மேலாண்மை வாரியம் போராட்டம் பற்றி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின் முடிவு எடுக்கப்படும். ஹெச். ராஜாவின் கீழ்த்தரமான பதிவிற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்