வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க துணை சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திருநங்கை…!

Default Image

அமெரிக்கா வரலாற்றிலேயே முதன்முறையாக  ஜோ பைடன் நிர்வாகத்தில், அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று உலக நாடுகள் முழுவதும் ஆண்கள், பெண்களைப் போலவே மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்கா வரலாற்றிலேயே முதன்முறையாக  ஜோ பைடன் நிர்வாகத்தில், அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்துக்கு குடியரசுக் கட்சியினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் மசோதா செனட் சபையில் புதன்கிழமை என்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இவர் 52 க்கு 48 என்ற ஆதரவு வாக்குகள் வித்தியாசத்தில் துறை சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரேச்சல் லெவின் இதற்கு முன்பதாக பென்சில்வேனியாவின் சுகாதார செயலாளராக இருந்துள்ளார். மாநில மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது துணை சுகாதார செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் முதல் லத்தீன் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்