சுல்தான் படத்திற்கு பின்னணி இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா.!!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் பின்னணி இசைகளை இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக படத்திற்கான டிரைலரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த டிரைலர் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்த டிரைலரில் வரும் பின்னணி இசையையை மட்டும்மில்லாமல் படத்தின் முழு பின்னணி இசையை பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் மிகவும் அதிரடியான சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர் பின்னணி இசையை செய்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் இசையமைப்பாளர் யுவனிடன் கேட்டிருக்கின்றார்கள், அவரும் சரி என்று கூறி படத்தின் முழுவதும் பின்னணி இசையை இசையமைத்துள்ளாராம்.
இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் பாடலிற்கும், டீசருக்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தை எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024