இலவச பட்டா., கந்துவட்டி ஒழிப்பு – கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு உறுதிமொழி பட்டிலை வெளியிட்ட கமல்ஹாசன்.!
கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு தன்னுடைய உறுதிமொழி பட்டியலை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, அத்தொகுதி மக்களுக்கு தன்னுடைய உறுதிமொழி பட்டியலை வெளியிட்டார். அதில், தொகுதி முழுக்க 6 ஆதி ஆழத்தில் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும். தொகுதியில் ரத்த வங்கி அமைக்கப்படும்.
ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் அமைத்து, அவர்களுக்கு உணவு, மருத்துவ காப்பீடு வழங்கப்படும். நீண்ட நாட்களாக பட்டா இன்றி வசிக்கும் மக்களுக்கு இலவச நில பட்டா வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.அனைத்து வார்டுகளிலும் உடற்பயிற்சி கூடம் மற்றும் நூலகங்கள் அமைக்கப்படும்.
மேலும், பிளாஸ்டிக் பயன்பாடு ஒலிக்கப்படும். ஊருக்கு வெளியே மத்திய சிறை மாற்றப்பட்டு அந்த இடத்தில் மார்க்கெட் பிளாசா அமைக்கப்படும். நகை உற்பத்தியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். கந்துவட்டி முழுமையாக ஒழிக்கப்படும் என்றும் அனைத்து வார்டுகளிலும் இலவச சட்ட சேவை மையங்கள் அமைக்கப்படும் என பல்வேறும் அம்ஸங்கள் இடம்பெற்றுள்ளன.
கோவை தெற்கு தொகுதியின் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்த உறுதிமொழிகளை வெற்றி வேட்பாளர் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் வெளியிட்டார்.(2/2)#Kamal_For_KovaiSouth#கோவையில்_கமல் #கோவை_தெற்கில்_நம்மவர் #கோவையும்_நமதே_கோட்டையும்_நமதே #நம்ம_சின்னம்_டார்ச்_லைட் pic.twitter.com/6psrau913D
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 24, 2021