#Breaking: ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி -மத்திய அரசு!
இணை நோய் இல்லாத 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 ஆம் செலுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மேலும், கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அளவ 6-8 வாரங்கள் வரை நீடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு, கடிதம் எழுதியுள்ளதை தொடர்ந்து, இணை நோய் இல்லாத 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்த விருப்பம் தெரிவிக்கும் நபர்கள், உடனடியாக முன்பதிவு செய்யவேண்டும் என்றும், இணை நோய் இல்லாதவர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசி அறிவித்துள்ளது.