எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்த திருச்சி., தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்ட முக ஸ்டாலின்.!

Default Image

ஸ்டாலின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டார் முக ஸ்டாலின். 

திருச்சி சிறுகனுரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முக ஸ்டாலின், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு திமுக திருச்சி மாநாடு ஒரு அடித்தளமாக அமைந்துள்ளது. திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்தது. கடலளவு திமுக செய்துள்ள சாதனைகளை சொல்ல தனி மாநாடு தான் போடவேண்டும்.

திமுக உருவாக்கிய அடிப்படை கட்டமைப்பை சிதைப்பது அதிமுக ஆட்சியின் பழக்கமாக இருந்தது. நவீன தமிழகத்தை திமுக ஆட்சிதான் கட்டமைத்து, அதனை சீர்குலைத்து அதிமுக அரசு தான் என குற்றசாட்டியுள்ளார். மே 2ம் தேதி தமிழகத்திற்கான புதிய விடியல் பிறக்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தின் முக்கியமான 7 துறைகளை வளர்த்தெடுப்பதே திமுகவின் நோக்கம். இதனைத்தொடர்ந்து, ஸ்டாலின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டம் வெளியிடப்பட்டது. அதன்படி, பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சமூகநீதி, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்புத்துறை ஆகியவை அடுத்த பத்தாண்டுகளில் வளர்த்தெடுப்பதே நோக்கம் என்று கூறியுள்ளார்.

முக ஸ்டாலினின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம்:

  • ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ1,000 உரிமை தொகை வழங்கப்படும்.
  • தமிழகத்தின் பசுமை பரப்பளவை உயர்த்த நடவடிக்கை.
  • கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும்.
  • மனித கழிவுகளை மனிதரே அகற்றும் முறை ஒழிக்கப்படும்.
  • பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 2 மடங்காக உயர்த்தப்படும்.
  • பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும்.
  • பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும்.
  • நகர்புறத்தில் புதிதாக 35 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
  • அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி செய்துதரப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்