வெறித்தனமான பின்னணி இசையில் செம மிரட்டலாக வெளியான கவினின் ‘லிஃப்ட்’ மோஷன் போஸ்டர்.!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிஃப்ட் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின் .கானா காணும் காலங்கள் சீரியல். மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட இவர் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் .
தற்போது இவர் லிஃப்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினீத் வரபிரசாத் என்பவர் இயக்கி வருகிறார். கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான ஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் கடந்த ஆண்டு வெளியானது அதனை தொடர்ந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நேற்று இந்த படத்திற்கான மோஷன் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், ரவிக்குமார், அஜய் ஞானமுத்து, விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி செம மிரட்டலான பின்னணி இசையில் கை, முகத்தில் ரத்த காயங்களுடன் கவின் ,அமிர்தா ஐயர் நிற்கும் மோஷன் போஸ்டரை கவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ள இந்த படத்தினை ஹெப்சி தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் கவினின் லிஃப்ட் திரைப்படத்தினை இந்த ஆண்டு வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024