‘முந்தானை முடிச்சு’ ரீமேக் : 3-வது முறையாக சசிகுமாருடன் இணையும் எஸ்.ஆர்.பிரபாகரன்.!

முந்தானை முடிச்சு ரீமேக்கை சுந்தரபாண்டியன் பட இயக்குனரான எஸ்ஆர் பிரபாகரன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1983-ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்து மெகா ஹிட்டடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு.இளையராஜா இசையில் ஊர்வசி ,கே.கே.சௌந்தர் ,தீபா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை சுமார் 37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜே.எஸ்.பி.ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் கதை,திரைக்கதை மற்றும் வசனத்தை பாக்யராஜ் எழுத உள்ளதாகவும்,அதில் பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளதாகவும் , ஊர்வசி நடித்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் இயக்குனர் யார் என்பதை கூறாத படக்குழுவினர் தற்போது முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கை இயக்குவது யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆம் முந்தானை முடிச்சு ரீமேக்கை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் ஏற்கனவே சசிகுமாரின் சுந்தர பாண்டியன் மற்றும் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் நடிக்கவுள்ள பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024