வைரல் வீடியோ..14,000 அடி உயரத்தில் தீப்பிடித்து சிதறிய என்ஜின்..!

Default Image

அமெரிக்காவில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து நேற்று மதியம் ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்ட 20 நிமிடங்களில் விமானத்தின் ஒரு என்ஜினில் தீப்பிடித்தது.

அந்த நேரத்தில் விமானம் 241 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் விமானத்தில் இருந்தனர். முதலில் என்ஜினில் வெள்ளை புகை வெளியது பின்னர், என்ஜின் உடனடியாக தீப்பிடித்தது. என்ஜினில் தீ பிடித்தபோது விமானம் 13,500 முதல் 14,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது.

விமானத்தின் ஒருபுறம் என்ஜின் முழுவதும் எரிந்தது. இதனால், அதன் உதிரி பாகங்கள் அனைத்தும் எரிந்து சிதறி குடியிருப்புகளில் விழுந்தன. எதிர்பாராத இந்த சம்பவத்தால் உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். என்ஜின் உதிரி பாகங்கள் தங்கள் வீடுகளில் விழுந்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. விமானம் விபத்துக்குள்ளாகும் என்று பயந்தனர்.

உடனே விமானி டென்வரில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார். பின்னர், டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. விமானம் அவசரமாக தரையிறங்கியவுடன் தீ அணைக்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

விமான என்ஜினில் தீப்பிடித்தபோது எடுத்த வீடியோ மற்றும் உடைந்த விழுந்த பாகங்கள் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. விமான பாகங்கள் தரையில் விழுந்ததாலும், விமானத்தில் ஏற்பட்ட விபத்தினாலும் யாரும் காயமடைந்ததாக இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்