ஆசிபா பானு குறித்து பேஸ்புக்கில் மனிதத் தன்மையற்ற கருத்து பதிவு …!கோட்டக் மகிந்திரா வங்கி ஊழியர் நீக்கம்…!

Default Image

கதுவா சிறுமி ஆசிபா பானு குறித்து பேஸ்புக்கில் மனிதத் தன்மையற்ற கருத்தைப் பதிவிட்டிருந்த  ஊழியரைக் கோட்டக் மகிந்திரா வங்கி பணியில் இருந்து நீக்கியுள்ளது. ஜம்மு கதுவாவில் 8வயதுச் சிறுமி பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துக் கேரளத்தின் பலரிவட்டம் கோட்டக் மகிந்திரா வங்கிக் கிளையில் பணியாற்றிய விஷ்ணு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், அவளைக் கொன்றது நல்லது, இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிரான மனித வெடிகுண்டாக மாறியிருப்பாள் எனப் பதிவிட்டுள்ளார்.

மனிதத் தன்மையற்ற இந்தக் கருத்துக்கு நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அவரைப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வங்கி நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் விஷ்ணுவைப் பணியில் இருந்து நீக்கியுள்ளதாகக் கோட்டக் மகிந்திரா வங்கி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்