வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்ட சீனாவின் அரசு ரகசியம் – கைது செய்யப்பட்ட பெண் ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்!
சீனாவின் அரசு ரகசியங்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பகிரப்பட்டதால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரை சீனாவில் கைது செய்துள்ளனர்.
செங் லீ எனும் தற்போதைய ஆஸ்திரேலிய பத்திரிகையாளராக பணியாற்றிய பெண்மணி சீனாவின் ஹூனான் மாகாணத்தில் பிறந்தவர். ஆனால் தனது சிறுவயதிலேயே ஆஸ்திரேலியாவுக்கு குடிப்பெயர்ந்ததால் ஆஸ்திரேலியக் குடியுரிமையும் பெற்றவராக இருந்துள்ளார். அதன்பின் 2012 ஆம் ஆண்டு சீனாவில் இயங்கி வரக்கூடிய சர்வதேச ஆங்கில தொலைக்காட்சி சேனலில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், சீனாவின் அரசு ரகசியம் வெளிநாடுகளுக்கு பகிரப்பட்டு வருவதாக சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் சீனாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் செங் லீயும் ஒருவராக இருந்துள்ளார். இந்நிலையில் ஆறு மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கையாளர்கள் இன்று சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.