உத்தராகண்ட் வெள்ளம் ! மாநில முதலமைச்சரிடம் நிலவரத்தை கேட்டறிந்த பிரதமர் மோடி

Default Image

பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திடம்  அம்மாநிலத்தின் நிலவரம் குறித்து  கேட்டறிந்தார். 

உத்தராகண்ட் மாநிலம்  சமோலியில் வெள்ளத்தில் சிக்கி 150 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி வருகிறது.த்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “அசாமில் இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட்டின் நிலவரம் குறித்து  அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இதர உயர் அதிகாரிகளுடன் பேசினார். அங்கு நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

மேலும் பிரதமர்  மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்  “உத்தரகாண்டில் ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வு குறித்து நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். உத்தராகண்ட் மாநிலத்திற்கு இந்தியா துணை நிற்பதுடன் அங்கு வசிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்கும் நாடு பிரார்த்தனை செய்கிறது. உயரதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதுடன், தேசிய பேரிடர் மீட்புப் படையை பணியில் அமர்த்துவது, மீட்பு நடவடிக்கைகள், நிவாரண பணிகள் ஆகியவை தொடர்பான தகவல்களை தொடர்ந்து பெறுகிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்