அன்று தோனி., இன்று கோலி: இதுதான் Spirit Of Cricket – களத்தில் நடந்தது என்ன?
இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ஜோ ரூட்டிற்கு உதவி செய்த இந்திய கேப்டன் விராட் கோலி.
கடந்த 2015-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்திய – தென்னாப்பிரிக்கா இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அப்போது, தென்னாபிரிக்கா வீரர் டு.பிளெசிஸ் அதிரடியாக விளையாடி வந்த அவர், சிக்ஸர் அடிக்க முன்றபோது, திடீரென சறுக்கி கீழே விழுந்தார். பின்னர் தசை பிடிப்பில் தவித்த அவருக்கு இந்திய அணி கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி விரைந்து முதல் உதவி செய்தார். இது அப்போது இணையத்தில் வைராகி, Spirit Of Cricket என்று ரசிகர்கள் பதிவு செய்து, பாராட்டி வந்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
ms faf pic.twitter.com/wx7lDHkv8k
— cricket (@cricketrack) October 25, 2016
இந்நிலையில், அதுபோன்று ஒரு சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், பேட்டிங் செய்தபோது தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு காலில் மசாஜ் செய்து உதவிய இந்திய கேப்டன் விராட் கோலி. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் அன்று தோனி செய்ததைப்போல், இன்று விராட் கோலி செய்துள்ளார் என்று பதிவிட்டு வருகின்றனர். இதுதான் Spirit Of Cricket என்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#SpiritOfCricket at its very best ????????#INDvENG @Paytm | @imVkohli pic.twitter.com/vaEdH29VXo
— BCCI (@BCCI) February 5, 2021