ind vs aus; ஈரப்பதத்தால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்; இந்தியா -62/2

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தி கப்பா, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை கைப்பற்றியுள்ளது.கடைசியாக நடைபெற்ற போட்டி ட்ராவில் முடிந்தது.இதனால் இந்த நான்காவது போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று தொடங்கிய இந்த நான்காவது போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 369/10 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது.இதன் பின்பு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 62 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.
தேயிலை இடைவேளைக்கு முன்னர் துணை கேப்டன் ரோஹித் சர்மா (44) இளம் வீரரான சுப்மான் கில் (7) தங்களது விக்கெட்டை இழந்தனர்.ஆடுகளம் தொடர்ந்து விளையாட ஏற்றவாறு இல்லாத வகையில் ஈரப்பதமாக உள்ளதால் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் சற்று முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி 62 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது களத்தில் சேதேஸ்வர் புஜாரா (8), கேப்டன் அஜிங்க்யா ரஹானே (2) ஆகியோர் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024