10 ஆண்டுகள் தூய்மை பணியாளராக வேலை பார்த்த அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராகியுள்ள கேரள பெண்மணி!

Default Image

கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றிய கேரளாவின் பத்னாபுரம் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக கேரள பெண்மணி பதவியேற்றுள்ளார்.

46 வயதான சிபிஎம் கட்சியைச் சேர்ந்த அனந்தவல்லி எனும் பெண் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதி நேர பணியாளராக கடந்த 10 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார் 6 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டு பணியாற்றிய இவருக்கு தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாழ்க்கையே மாறியுள்ளது. அவர் வேலை பார்த்த அதே அலுவலகத்தில் அவர் பஞ்சாயத்து தலைவர் இருக்கையில் அமர்ந்துள்ளார்.

இந்த வெற்றி குறித்து கூறிய அனந்தவல்லி, சிபிஎம் கட்சியின் ஆதரவால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளதாகவும், இத்தனை ஆண்டுகள் அலுவலகத்தை தூய்மையாக வைத்திருக்க ஓடிஓடி பணியாற்றிய அவர், தற்பொழுது பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளது அங்குள்ள ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் தனக்கு நிறைய பொறுப்புகள் வந்து விட்டதாகவும், மக்களுக்கு பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்