பாகிஸ்தானில் தீ வைத்து, இடித்து இந்து கோயில் தகர்ப்பு..!
இந்த நேரத்தில் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. ஆனால், புதிய ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாகிஸ்தானில் இந்துக்களின் ஒரு கோயில் உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக, மக்களிடையே அதிருப்தி அதிகரித்து உள்ளது. இது குறித்த வீடியோவும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சொந்த மாநிலமாக கூறப்படும் கைபர் பக்துன்க்வாவின் கரக் மாவட்டத்தில் நேற்று ஒரு குழு இந்து கோவிலை உடைத்து பின்னர் எரித்தனர் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் நடத்தியதாகவும், எல்லாவற்றையும் பார்த்த பிறகும் காவல்துறையும், நிர்வாகமும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கைபர் பக்துன்க்வா முதல்வர் மஹ்மூத் கான் கூறுகையில், இந்த தாக்குதலை “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்” என்று குறிப்பிட்டார். சட்டத்தை கையில் எடுத்த அனைத்து மக்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
This is new Pakistan!
A Hindu Temple was destroyed today in Karak, a city in Khyber Pakhtunkhwa province, governed by PTI Govt.
Police or forces didn’t stop the mob because they were chanting Allah-o-Akbar.A shameful day, Beyond condemnation indeed!
pic.twitter.com/ZIzmCnoGUX— Shama Junejo (@ShamaJunejo) December 30, 2020
லண்டனை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர் ஷமா ஜுன்ஜோ இந்த வீடியோவைப் பகிர்ந்தார். அதில், பாகிஸ்தான் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.