ஜம்மு-காஷ்மீரில் முதல் பஸ் டிரைவர் ஆன பூஜா தேவி..!

காஷ்மீரை சார்ந்த பூஜா என்ற பெண் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டார். இவர் காரை ஓட்ட வேண்டும் என்று அவரது கனவாக இருந்தது. தற்போது பூஜாவின் இந்த கனவு நனவாகியுள்ளது. பூஜா காஷ்மீரில் உள்ள பசோஹலி சந்தர் கிராமத்தில் வசிப்பவர், பூஜா கதுவாவின் முதல் பெண் பஸ் டிரைவர் ஆனார். பூஜாவின் இந்த கனவையும், அவரின் விடாமுயற்சியையும் பார்த்துபலர் பாராட்டி வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை காலை, பூஜா ஜம்முவிலிருந்து கத்துவாவிற்கும், கத்துவாவிலிருந்து ஜம்முக்கும் பஸ்ஸை இயக்கினார். பூஜாவை அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் வாகனம் ஓட்டுவதை எதிர்த்தனர். ஆனால், இப்போது அவர் அனைவராலும் பாராட்டப்படுகிறார்.
முன்னதாக, பூஜா சில மாதங்களாக ஜம்மு மற்றும் கத்துவா இடையே ஒரு லாரி ஓட்டிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயதாகும் பூஜாவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. போக்குவரத்து சங்கம் பூஜாவின் உரிமத்திற்கு ஒப்புதல் அளித்து, தினசரி ஜம்மு-கதுவாவிற்கு ஓட்டுநராக நியமித்துள்ளது.
இதுகுறித்து பூஜா கூறுகையில், தனது கனவு நனவாகியதில் பூஜா மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தனது குழந்தை பருவ கனவு இப்போது நனவாகியுள்ளது இதற்காக, சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கணவன் மற்றும் குடும்பத்திற்கு எதிராகச் சென்று தனது கனவை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024