நீதிமன்றத்தில் வீர வசனத்தை பேச சொல்லுங்கள் -ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் சண்முகம் பதிலடி

ஹெச்.ராஜா பேசும் வசனங்களை நீதிமன்றத்தில் பேச சொல்லுங்கள் என சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை,நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்க்கு தமிழக அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால்,தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர்.இந்த யாத்திரை டிசம்பர் 6-ஆம் தேதி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பதால், பல்வேறு பிரச்சனைகள் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். இதனையடுத்து, டிசம்பர் 6 -ஆம் தேதி வேல் யாத்திரை நிறைவு பெறுவதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில்,டிசம்பர் 7-ஆம் தேதி நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவில் ,2000 பேருக்கு மேல் கூடுகிறார்கள்,ஆனால் வேல்யாத்திரைக்கு தடை விதிக்கிறார்கள் என்று பாஜகவின் ஹெச்.ராஜா கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம்,நீதிமன்றத்தில் வீர வசனத்தை பேச சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024