க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு: மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது! – கி.வீரமணி

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் பதிப்பு துறையில், தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள க்ரியா ராமகிருஷ்ணன், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மரண படுக்கையிலும், தனது பணியை உயிர்மூச்சாக கருதி தனது பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில்,இவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், ஆசிரியர் வீரமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பதிப்பக சாதனையாளர் க்ரியா உயிரிழந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியதாக பதிவிட்டுள்ளார். மேலும், அவரை இழந்துவிடும் அவரது குடும்பத்தினர்கள், பதிப்பக பணி தோழர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல். ‘தமிழுக்கு தொண்டு செய்தோன் சாவதில்லை’ என்றார் புரட்சி கவிஞர்.இன்றும் என்றும் தமிழ்கூறும் நல்லுலகின் சிந்தனையில் அகராதி கருவூலமாக க்ரியா ராமகிருஷ்ணன் வாழ்வார் என்பது உறுதி.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024