காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்து நைஜீரியாவில் முற்றுகை போராட்டம்!
காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்து நைஜீரியாவில் உள்ள சுங்கச்சாவடியை மக்கள் முற்றுகை இட்டு போராட்டம் நடத்துகின்றனர்
நைஜீரியாவில் உள்ள லகோஸ் எனும் நகரில் காவல்துறையினர் அத்து மீறி செயல்படுவதாக பொதுமக்கள் கூறிவந்த நிலையில், காவல்துறையின் அட்டூழியம் அதிகரித்திருப்பதாகவும் காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்தும் இன்று சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கானோர் லாகோஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே அங்குள்ள மக்களின் கூட்டத்தை கலைப்பதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ராணுவ வீரர்கள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் மக்கள் பதற்றத்தில் அங்குமிங்கும் சிதறி ஓடியதால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல காட்சியளித்துள்ளது. இந்நிலையில் பத்து பேர் வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.