கேரளாவில் போலி மது அருந்தி 5 பேர் உயிரிழப்பு, 9 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வலயாரில் போலி மது அருந்தியதாகக் கூறி 5 பேர் உயிரிழந்துள்ளனர், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த மதுபானம் தமிழ்நாட்டிலிருந்து வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
போலி மதுபானம் காரணமாக தான் உயிரிழந்தார்கள் என ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன, ஆனால் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் தெளிவாக தெரியவரும் என்று பாலக்காடு போலீஸ் கண்காணிப்பாளர் சிவா விக்ரம் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் உள்ளனர்.
இறந்தவர்களில் ஒருவரான கே.சிவன் (37) தமிழகத்திற்குச் வந்தபோது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தைக் கொண்டு வந்து பின்னர் கிராம மக்களிடையே கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் அவரது மனைவியும் ஒருவர் ஆவார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024