2000 லிட்டர் நெகிழி தண்ணீர் தொட்டியின் திட்ட மதிப்பீடு ரூ.7.70 லட்சம்… பொதுமக்கள் அதிர்ச்சி….

Default Image

ஆயத்த ஆடை உற்பத்தியில் முன்னனியில் உள்ள திருப்பூரில், 50வது வார்டில் அமைக்கப்பட்டிருக்கும் நெகிழி தண்ணீர் தொட்டியின் திட்ட மதிப்பீடு ரூ.7.70 லட்சம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை திறந்து வைத்த திருப்பூர் தெற்கு அதிமுக ச.ம.உ  ‘நான் திறப்பாளர்  மட்டுமே’ என கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியின் 50வது வார்டு 1வது வீதியில் உள்ள  2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நெகிழி தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டது. இதனை கடந்த 7ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக ச.ம.உ குணசேகரன் திறந்து வைத்தார். அந்த தொட்டியில் திட்ட மதிப்பீடாக ரூ.7.70 லட்சம் என எழுதப்பட்டிருக்கிறது. சாதாரண நெகிழி தண்ணீர் தொட்டியின் விலை ரூ.7.70 லட்சமா? என்ற வினா எழுந்ததுடனும்,  விமர்சனங்களும், திட்ட மதிப்பீட்டை வைத்து  பல மீம்ஸ்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இதுகுறித்து அந்த நெகிழி  தண்ணீர் தொட்டியை திறந்து வைத்த ச.ம.உ குணசேகரன் கூறியதாவது,  நான் திறப்பு விழாவிற்கு மட்டுமே சென்றேன்.தொட்டியின் அருகில் செல்லவில்லை. குடிநீர் குழாய் வரும் இடத்தில் மட்டுமே சென்று திறந்து வைத்தேன். ஆகையால், எனக்கு இதுகுறித்து தெரியவில்லை. அது எனது நிதியில் இருந்து கட்டப்படவில்லை. பொது நிதியில் இருந்து தான் கட்டப்பட்டுள்ளது. நான்  திறப்பாளர் என்கிற முறையில் மட்டுமே சென்று திறந்து வைத்தேன். என்ன வேலைக்காக எவ்வளவு திட்டமதிப்பீடு செய்யப்பட்டது என்ற விளக்கத்தை தண்ணீர் தொட்டி அருகே வைக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்