பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை! திடீர் தடைக்கு காரணம் என்ன?
பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு துறை உத்தரவு.
இன்று பலரையும் தன் பக்கம் கட்டிப்போட்ட ஒரு செயலி தான் டிக்டாக் செயலி. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவராலும் பயன்படுத்தப்பட்ட ஒரு செயலி ஆகும். இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்காவிலும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பாகிஸ்தானிலும் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் இடப்பெறும் ஒழுக்கக்கேடு மற்றும் அநாகரிகமான உள்ளடக்கத்தை தடுப்பதற்கு தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைத்தொடர்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்த செயலியில் பல தவறான வீடியோக்கள் ஷேர் செய்யப்படுவதாக அரசிற்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து, தொலைத்தொடர்புத்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக டிக்டாக் நிர்வாகம் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், அநாகரீகமான வீடியோ பதிவுகளை முறைப்படுத்துமாறு, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது.