டிக்டாக் பதிவிறக்கத்திற்கு தடை இல்லை! அமெரிக்க அதிபரின் அறிவிப்பிற்கு தடை!
டிக்டாக் செயலி பதிவிறக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், அதிபரின் முடிவுக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.
டிக்டாக் செயலியானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆக்கிரமித்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக, சீன செயலிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அதிபர் ட்ரம்ப் கடந்த செம்படர் மாதம், சீனாவின் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் இல்லையெனில் தடை செய்யப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், டிக்டாக் செயலி பதிவிறக்கத்துக்கும் தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், அதிபரின் முடிவுக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அமெரிக்க அரசு, நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்துள்ளது.