48 மணிக்கு பிறகு தா..வெள்ளைமாளிகை! வீடியோவில் ட்ரம்ப்.!வெளியீட்டு நம்பிக்கை
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடல்நலம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேல் கண்காணிப்புக்குட்டப்பட்டது என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.இருந்த போதிலும் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் இருந்து அதிபர் ட்ரம்ப் வீடீயோ வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு ஆளான அதிபர் ட்ரம்ப் ஹெலிகாப்டர் மூலமாக மேரிலாண்டில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மிகவும் உயர்மட்ட மருத்துவ நிபுணர்க்குழுவினர் ட்ரம்பிற்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளனர்.ரெமிடிவிசர் உள்பட கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டன.அவரது மற்ற உடல் உறுப்புகளில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் ட்ரம்பிற்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும் லேசாக காய்ச்சல் இருந்ததாகவும்தகவல் வெளியானது.
— Donald J. Trump (@realDonaldTrump) October 3, 2020
நேற்று முழுவதும் மிகுந்த கவனத்துடன் டிரம்பின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டதாகவும் அவருடைய உடல் நிலையில் அடுத்த 48 மணி நேரம் முக்கியமானது என்று வெள்ளை மாளிகை உயர்அதிகாரி மார்க் மெடோஸ் தெரிவித்தார்.இத்தகவல் காட்டுத்தீ போல பரவியது மருத்துவமனையில் இருந்து ட்ரம்ப் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியது.இவ்வீடியோ 4நிமிடம் ஓடக்கூடியதாக உள்ளது.இப்பதிவில் தனது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தாம் நலமாக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில் வெள்ளை மாளிகை தமது அறிவிப்பை திரும்ப பெற்று கொண்டது.