தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பிரசாந்த் பூஷண் மனு தாக்கல்

தலைமை நீதிபதியை விமர்சித்த வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார் பிரசாந்த் பூஷண்.
சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே இருசக்கர சொகுசு வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், நீதிபதி ஹெல்மெட் அணியாதது குறித்தும், முகக்கவசம் அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனையடுத்து, பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது.பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனையை அறிவித்தது உச்சநீதிமன்றம். அதன்படி,நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதிப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதன் பின்னர் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில், நீதிமன்ற தீர்ப்பையடுத்து தனது மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் பங்களிப்புடன் ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டதாக பதிவிட்டார். இதனையடுத்து உச்சநீதிமன்றம் விதித்த ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தினார் பிரஷாந்த் பூஷன். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார் பிரசாந்த் பூஷண் .
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024