நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை கமிஷன் அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் – டாக்டர்.ரவிக்குமார்!

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பான நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை கமிஷன் அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என டாக்டர்.ரவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறை குறித்து தமிழக அரசால் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் அவர்களின் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக நீதிபதி ராஜேஸ்வரன் அவர்களின்அறிக்கை தற்பொழுது வரையிலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.ரவிக்குமார் அவர்கள், சென்னையில் நடைபெற்ற வன்முறை குறித்து விசாரிக்க தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட நீதிபதி ராஜேஸ்வரன் அவர்களின் விசாரணை கமிஷனின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சென்னையில் நடைபெற்ற வன்முறைகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை கமிஷனின் அறிக்கையைத் தமிழக அரசு வெளியிடவேண்டும். அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும்
— Dr Ravikumar M P (@WriterRavikumar) September 28, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024