உலகம் சிறப்பாக இருப்பதற்கு ஐ.நா அவையே காரணம்… பிரதமர் மோடி புகழாரம்…
ஐ.நா சபை அமைப்பு துவங்கி இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்காக இந்த ஆண்டு இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை ஐ.நா பொது சபையில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த விவாத நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கரோனா பாதுகாப்பு காரணமாக காணொலி வாயிலாக உரை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு விழாவில் இன்று பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிபர்களும், பிரதமர்களும் காணெளி மூலம் உரை நிகழ்த்தினர்.இதில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, விரிவான சீர்திருத்தங்கள் இன்றி ஐக்கிய நாடுகள் அவை விமர்சனங்களை எதிர்கொள்கின்றன. உலகம் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ள இந்தசூழலில் ஐக்கிய நாடுகள் அவையில் பன்முகத்தன்மை அவசியம். காலாவதியான கட்டமைப்புகளுடன் இன்றைய சவால்களை எதிர்த்துப் போராட முடியாது. ஒன்றுக்கொன்று இணைந்த இன்றைய உலகில் யதார்த்தங்களை பிரதிபலிக்கும், அனைத்து பங்குதாரர்களுக்கும் குரல் கொடுக்கும், சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் மனித நலனில் கவனம் செலுத்தும் பன்முகத்தன்மை உடைய சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. நமது உலகம் இன்று சிறப்பான நிலையில் இருப்பதற்கு ஐக்கிய நாடுகள் அவையே காரணம்” என்று தனது கருத்தை தெரிவித்தார்.