காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம்.?- மாவட்ட தலைவர் விளக்கம்.!
காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதிவு தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம். சென்னை மேற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் விளக்கம்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், அக்கட்சியின் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு எதிர் வரும் தேர்தலில் அதிக இடம் ஒதுக்குவதுடன், துணை முதலமைச்சர் பதவியும் கேட்டுப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதுகுறித்து தற்போது, மாவட்ட தலைவர் வீரபாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று முன்தினம் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதிவு தர வேண்டும் என்று எந்த தீர்மானமும் நிறைவேற்ற படவில்லை என்றும் சில தொலைக்காட்சி மற்றும் ஊடங்களில் வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.