கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்!
கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியப்பாடி பகுதியில் வசித்து வந்த பாதிரியார் ஜான் ரவி கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது சடலத்தை ஆரணியை அடுத்த குன்னத்துர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினர் மத்தியிலும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் சமரசம் செய்து ஜான்ரவியின் உடலை கொரோனா நடைமுறையை பின்பற்றி அடக்கம் செய்தனர்.