தமிழகத்தில் குறையும் கொரோனா உயிரிழப்பு.. ஒரே நாளில் 101 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கடந்த 21 நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100- ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,67,430 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,22,757 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறையத் தொடங்கியது. அந்தவகையில் இன்று 101 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது.
இன்று உயிரிழந்த 101 பேரில், தனியார் மருத்துவமனையில் 36 பேரும், அரசு மருத்துவமனையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக, கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் விகிதம் 1.72 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 93 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கடந்த 21 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் 2,405 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,557 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 366 பேரும், திருவள்ளூரில் 366 பேரும், மதுரையில் 331 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,489 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,851 ஆக அதிகரித்தது. இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024